எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்ற முத்திரையை திருடியவர் கைது

எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்ற முத்திரையை திருடியவர் கைது
Updated on
1 min read

சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்ற முத்திரையை திருடியதாக அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை 6-வது பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் தேதி முத்திரை அண்மையில் திருடப்பட்டது. இதுகுறித்து அந்தநீதிமன்றத்தின் மொழி பெயர்ப்பாளர் மதுரவல்லி, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்அந்த நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிஇருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் திருட்டில்ஈடுபட்டது அந்த நீதிமன்றத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த சைதாப்பேட்டை, தாதண்டர் நகர், சி பிளாக் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (48) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் விவகானந்தனை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் விவேகானந்தன், ஏற்கெனவே வழக்குத் தொடர்பாக போலீஸார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்த மதுப்பாட்டில்களை திருடியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in