Published : 04 May 2022 06:02 AM
Last Updated : 04 May 2022 06:02 AM

ஜோலார்பேட்டை | ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்

1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் .

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் நேற்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் வரை செல்லும் விரைவு ரயில் 1-வது நடைமேடைக்கு வந்தடைந்தது.

இந்த ரயிலில் ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், டி-1 முன்பதிவு பெட்டியில் சோதனை மேற்கொண்டபோது அங்கு கழிவறை அருகே கேட்பாரின்றி ஒரு பெரிய பை இருந்தது. அதை சோதனையிட்ட போது. அதில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் ரயில் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x