

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பனியன் தொழிலாளியை, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் தட்டான்குட்டை பசுமை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (52), பனியன் தொழிலாளி. நேற்று முன் தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுடைய சிறுமியையும், 5, 7 வயதுடைய சகோதரிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோர், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கணேசனை போலீஸார் கைது செய்தனர்.