

குமாரபாளையத்தில் பள்ளி மாணவிக்கு நடக்கயிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தனர்.
குமாரபாளையத்தில் பிளஸ் 1 மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அலுவலர் அருள்ராணி மற்றும் வருவாய்த் துறையினர் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் மாணவிக்கு திருமணம் செய்வது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து பெண்ணுக்கு 18 வயது ஆகாத நிலையில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். உரிய வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் செய்யலாம் என அறிவுறுத்தி திருமணத்தை நிறுத்தினர்.
மீறி திருமணம் செய்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாணவியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டுள்ளனர்.