

குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை, குன்னூர் கீழ்பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தஆஷிக் ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். இவரது காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார்.
நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் ஆஷிக், தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த ஆஷிக்,தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
பொதுமக்கள் மாணவியை மீட்டு, குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆஷிக்கைபிடித்து மின் கம்பத்தில் கட்டிவைத்த பொதுமக்கள், இதைத் தொடர்ந்து குன்னூர் நகர போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர்.