Published : 30 Apr 2022 06:40 AM
Last Updated : 30 Apr 2022 06:40 AM
கரூர்: கரூர் மாவட்டம் நஞ்சை கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் டி.வசந்தி(45). இவர், கடந்த 2011ஜூனில் தென்னிலை தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியபோது, கூட்டுப் பட்டாவை பிரித்து தனிப்பட்டா கேட்ட விஜயலட்சுமி என்பவரிடம் ரூ.3,000 லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வசந்தி, பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
கரூர் முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி சி.ராஜலிங்கம் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை மற்றும் அரசு ஊழியர் தனது கடமையைச் செய்வதற்கு லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT