

கடலூர்/விழுப்புரம்: கடலூரில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் கடையில் வேலை செய்து வந்த 21 வயது இளம்பெண், கடந்த மாதம் 28-ம் தேதி இரவு வேலை முடித்து தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கம்மியம்பேட்டை சென்றார். அங்குள்ள பழைய கட்டிடத்தில் அவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற 3 நபர்கள், அங்கு பேசிக்கொண்டு இருந்த இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டினர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டுதப்பி சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் கடலூர் டிஎஸ்பிகரிகால் பாரி சங்கர் மேற் பார்வையில் திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக திருப்பா திரிப்புலியூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சேர்ந்த கிஷோர் (19), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற சதீஷ்குமார் (19), கடலூர் புதுப்பாளையம் பிஆர் நகரைச் சேர்ந்த ஆரிப் என்கிற சையது ஆரிப் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துநீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இவர்க ளின் குற்றச்செய்கையை கட்டுப் படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் போலீஸார் கடலூர் மத்திய சிறையில் உள்ள அவர்கள் 3 பேரிடம் உத்தரவு நகலை வழங்கினர்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி அருகே செ.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் (28), தர்மராஜ் என்கிற மணிகண்டன் (21). இவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சசிக்குமார், தர்மராஜ் ஆகிய இருவரையும் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு எஸ்பி நாதா பரிந்துரை செய் தார்.
அதன்பேரில் சசிக்குமார், தர்மராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி எஸ்பிக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவரிடம் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் இரவு வேலை முடித்து தனது ஆண் நபருடன் கம்மியம்பேட்டை சென்றார். 3 நபர்கள், அங்கு பேசிக்கொண்டு இருந்த இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டினர்.