

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் வெங்கட்ரமணன்(27). இவர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அந்த மாணவியை தேடி அவரது வீட்டுக்கே சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரின் உதவியுடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், வெங்கட்ரமணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்தனர்.