மதுரை | அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு

மதுரை | அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அத்திமாகுலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (30). இவர், அரசு வேலையில் சேர முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாவர்த்தம்பட்டறை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (47), தரணிகுமார் (38) ஆகிய 2 பேரும், புருஷோத்தமனுக்கு அறிமுகமாகினர். இவர்கள் 2 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக புருஷோத்தமனிடம் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய புருஷோத்தமன் ரூ.19 லட்சம் பணத்தை பல தவணைகளாக ராஜ்குமார் மற்றும் தரணிகுமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் எந்த வேலையும் வாங்கி தரவில்லையாம்.

இதனால், பொறுமை இழந்த புருஷோத்தமன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதற்கான கால அவகாசம் கேட்ட ராஜ்குமார், தரணிகுமார் ஆகியோர் ரூ.19 லட்சம் பணத்தை திருப்பி வழங்கவில்லை. மாறாக பணம் கேட்ட புருஷோத்தமனை ஒரு கட்டத்தில் மிரட்ட தொடங் கினர்.

இதனால், மனமுடைந்த புருஷோத்தமன் திருப்பத்தூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். அவர்களது உத்தரவின் பேரில், உமராபாத் காவல் துறையினர் ரூ.19 லட்சம் மோசடி செய்த தரணிகுமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in