கரூர் | நில அளவைப் பணிக்கு ரூ.5,000 லஞ்சம்: சர்வேயரிடம் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரூர்: நில அளவைப்பணிக்கு ரூ.5,000 லஞ்சம் பெற்ற சர்வேயரிடம் கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் நில அளவையர் (சர்வேயர்) ரவி. இவர் கூடுதல் பொறுப்பாக தோரணக்கல்பட்டியையும் கவனித்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மற்றும் இவரது தாய் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்த நிலத்தை தனிப் பட்டா பெறுவதற்காக அளந்து பிரிக்க ரவியை அணுகியுள்ளார். ரவி ரூ.8,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் அளிக்க விரும்பாத சரவணன் இதுகுறித்து கரூர் மாவட்ட ஊழல் தடுப்புகண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் ரவியிடம் பேசி ரூ.5.000 லஞ்சம் வழங்குவதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அலுவலகத்தில் ரவியிடம் சரவணன் இன்று (ஏப்.25) ரூ.5,000 வழங்கும்போது கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான போலீஸார் ரவியை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in