

கடலூர்: குமராட்சி அருகே காவல் உதவி ஆய்வாளரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
குமராட்சி அருகே உள்ள சிறகிழந்தநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 14.03.22-ம் தேதி குமராட்சி உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தில் பேரில் நிறுத்த முயற்சி செய்தனர். அந்த காரை ஒட்டி வந்தவர் உதவி ஆய்வாளர் முருகேசன் மீது காரை ஏற்றி கொலை முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து உதவி ஆய்வாளர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி காவல் ஆய்வாளர் அமுதா மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டன். இதுதொடர்பாக காட்டுமன்னார்கோவில் வட்டம் கத்திரிமேடு மெயின்ரோட்டைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவர் கைது செய்யப்பட்டார்.
கார்த்திக் மீது கொலைமுயற்சி, அடிதடி, மணல் கொள்ளை, திருட்டு என 12 வழக்குகள்உள்ளன. இவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் குண்டர் சட்டத்தில் கார்த்திக்கை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் இருந்த கார்த்திக்கிடம் போலீஸார் நேற்று உத்தரவு நகலை வழங்கினர்.
காரை சந்தேகத்தில் பேரில் நிறுத்த முயற்சி செய்தனர்.