

பெண் ஏட்டு ஒருவரால் பாலியல் புகாருக்கு ஆளான திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலை யத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முத்துப் பாண்டி. இவர் மீது பெண் ஏட்டு ஒருவர் அண்மையில் பாலியல் புகார் கூறினார். இது பற்றி சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாத்திடம் அவர் புகார் மனு அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி பொன்னி நேற்று உத்தரவிட்டார். இச்சம்பவம் விருதுநகர் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.