

கோவை: கோவை திருச்சி சாலையைச் சேர்ந்தவர் மாசிலாமணி(31). கஞ்சா விற்பனை வழக்கு தொடர்பாக, மாசிலாமணியை கடந்த சிலநாட்களுக்கு முன்னர் போலீஸார் கைது செய்து, தங்களது வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போதுஅவரை கைது செய்ய எதிர்ப்புதெரிவித்து, அவரது உறவினர்களான மூன்று பெண்கள், போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், திருச்சி சாலை ஹைவேஸ் காலனியைச் சேர்ந்த புவனேஸ்வரி(29), ருக்கு மணி(53), காமராஜபுரத்தைச் சேர்ந்த பரிமளா(34) ஆகியோர் மீது 4 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.