சிவகங்கை | ஆயுள் கைதி தற்கொலை விவகாரம் - மனைவியிடம் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க உத்தரவு

சிவகங்கை | ஆயுள் கைதி தற்கொலை விவகாரம் - மனைவியிடம் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: சிவகங்கை திறந்தவெளி சிறையில் ஆயுள்கைதி தற்கொலை செய்த வழக்கில் மனைவியிடம் பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த லங் கேஸ்வரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் கருப்பசாமி (52). கொலை வழக்கில் 2008-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையிலும், 2018-ல் சிவகங்கை திறந்தவெளி சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்தனர்.

கடந்த மார்ச் 22-ல் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட் டதாகத் தெரிவித்தனர். அன்று மாலை என் கணவர் உயிரிழந்தார். என் மகளை பார்க்க பரோல் வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக சிறையிலுள்ள மரத்தில் ஏறிய தாகவும், அப்போது மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் சிறை காவலர்கள் தெரிவித்தனர். என் கணவர் உயிரிழந்த நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோவை வழங்கவும், இழப்பீடு வழங்கவும், சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வும் உத்தரவிட வேண்டும்.

மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து, கருப்பசாமியின் பிரேதப் பரிசோதனை வீடியோ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கவும், மனு தொடர்பாக உள்துறை கூடுதல் செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in