

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காப்பாற்ற கணவரும் கிணற்றில் குதித்ததில் இருவரும் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் அருகே மோளப்பாடியூரை சேர்ந்த விவசாயி முத்துவேல்(35). இவரது மனைவி தனலட்சுமி (30). இரு பெண் குழந்தைகள் உள்ளன. இருவருக்குமிடையே நிலம் விற்பனை தொடர்பாக தகராறு இருந்தது. நேற்று மாலை இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதில், தனலட்சுமி அவர்களது தோட்டத்துக் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த கணவர் முத்துவேல் மனைவியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இருவரின் உடலையும் திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.