புதுச்சேரி | மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

புதுச்சேரி | மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
Updated on
1 min read

புதுச்சேரி நல்லூர்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவருடன் நட்பாக பழகினார். அப்பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன்பு வேறொருவருடன் திருமணமான நிலையில் அப்பெண் கணவர், குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். ஆனாலும் சந்தோஷ்குமார் அவ்வப்போது அப்பெண்ணின் இருப்பி டத்தை நோட்டமிட்டு வந்துள்ளார்.

மேலும், இரு தினங்களுக்கு முன்பு அப்பெண்ணின் செல்போன் நம்பரில் அழைத்து ஆபாசமாக பேசிய சந்தோஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி வீடியோ காலிலும் அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் வீட்டுக்கு கணவர் இல்லாத நேரத்தில் சென்ற சந்தோஷ்குமார் அங்கிருந்த அம்மி குழவிக்கல், செங்கற்களால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவானார். உறவினர்கள் அப்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

அப்பெண்ணின் இருப்பிடத்தை நோட்டமிட்டு வந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in