ப்ரீபயர் விளையாட செல்போன் தராததால் கிணத்துக்கடவு அருகே சிறுவன் தற்கொலை

ப்ரீபயர் விளையாட செல்போன் தராததால் கிணத்துக்கடவு அருகே சிறுவன் தற்கொலை
Updated on
1 min read

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிட்டனம்மாள். இவர்களுக்கு, மூன்று பெண் குழந்தைகளும், ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) என்ற 2 மகன்களும் இருந்தனர். சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஈஸ்வரன் 8-ம் வகுப்பும், அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, ‘ப்ரீபயர்’ விளையாடுவதற்காக செல்போன் கொடுக்குமாறு, ஈஸ்வரனிடம், அர்ஜூனன் கேட்டுள்ளார்.

ஈஸ்வரன் செல்போன் தர மறுத்ததால், கோபமடைந்த அர்ஜூனன் வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுக் கொண்டார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அர்ஜுனனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in