

மானாமதுரை: மானாமதுரையில் மாற்றுத் திறனாளி பெண்ணைத் தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மானாமதுரையைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி நாகலட்சுமி. திருமணம் ஆகாமல், தாயு டன் வசித்து வருகிறார். அவ ரது குடும்பத்தினருக்கும், அருகேயுள்ள வீரமணி குடும் பத்தினருக்கும் இடையே இடப் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக வீரமணி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மானாமதுரை டவுன் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் உள்ளிட்ட போலீஸார் மாற்றுத்திறனாளி நாகலட்சுமியையும், அவரது தாயாரையும் வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்தியதோடு, அவர்களை தாக்கினர்.
இது குறித்து நாகலட்சுமி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இதில் நாகலட்சுமியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதியவும், நேர்மையாக விசாரணை நடத்தி 12 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் எஸ்.பி. செந்தில்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மீது மானா மதுரை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவரை சிவகங்கை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. உத்தர விட்டார்.