

நாகர்கோவில்: குழித்துறை இடைக்கோட்டைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் சஜித்(30). இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாதச்சீட்டு நடத்திய அந்த மாணவி பண நஷ்டத்தால் சிரமம் அடைந்துள்ளார்.
இதை பயன்படுத்தி அந்த மாணவிக்கு பணஉதவி செய்வதாக கூறி அவரை சஜித் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இது குறித்து அம்மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராணுவ வீரர் சஜித், அவரது நண்பர்கள் ஜாண் பிரிட்டோ, கிரீஷ், லிபின்ஜான் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஏற்கெனவே ஜாண் பிரிட்டோ, லிபின்ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சஜித் நேற்று தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.