

வாலாஜாபேட்டை: வாலாஜாவில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப் பட்ட குட்கா பார்சலை விநியோகம் செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது. இதில், வாலாஜா பகுதியில் உள்ள கடைகளுக்கு கடந்த பல மாதங்களாக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை விநியோகம் செய்து வந்ததாக ஜீவாராம் (21), காலுசிங் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.