

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு காப்பகத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த,மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது பெண் தங்கியிருந்தார். காப்பக செவிலியர்கள்அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், 6 மாதம் கர்ப்பமாகஇருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், காப்பகத்தில் காவலாளியாக பணியாற்றிவந்த தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த லட்சுமணன்(41) என்பவர், இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, லட்சுமணனை போலீஸார் கைது செய்தனர்.