சேலம் | கிரெடிட் கார்டு பண உச்சவரம்பை அதிகப்படுத்துவதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடி

சேலம் | கிரெடிட் கார்டு பண உச்சவரம்பை அதிகப்படுத்துவதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடி
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் கிரெடிட் கார்டு பண உச்சவரம்பை அதிகப்படுத்தி தருவதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் கோரிமேடு இருசாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (44). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார். கடந்த மாதம் புருஷோத்தமனை செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டு, கிரெடிட் கார்டுக்கான பண உச்சவரம்பை உயர்த்தி வழங்குவதாகவும்,அதற்கு கிரெடிட் கார்டு எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஓடிபி ஆகியவற்றை கேட்டுள்ளார்.

இதனை உண்மையென நம்பிய புருஷோத்தமன் கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இவரது கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூ. 2,30,265 மதிப்புக்கு பொருட்களை வாங்கியதாக புருஷோத்தமன் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸில் புருஷோத்தமன் புகார் செய்துள்ளார். காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in