கன்னியாகுமரியில் லஞ்சம் வாங்கி கைதான டிஎஸ்பியிடம் விடிய விடிய விசாரணை: வீட்டில் மேலும் ரூ.5 லட்சம் சிக்கியது

கன்னியாகுமரியில் லஞ்சம் வாங்கி கைதான டிஎஸ்பியிடம் விடிய விடிய விசாரணை: வீட்டில் மேலும் ரூ.5 லட்சம் சிக்கியது
Updated on
1 min read

நாகர்கோவில்: கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் தங்கவேலு. கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக உள்ளார். நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்த சிவகுரு குற்றாலம் என்பவர், நிலம் வாங்குவதற்காக ரூ.1.50 கோடியை ஒருவரிடம் கொடுத்ததாகவும், பணத்தை வாங்கியவர் நிலத்தைஎழுதித் தரவில்லை என்றும், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இவ்வழக்கை முடித்து கொடுக்க டிஎஸ்பி தங்கவேலு ரூ.15 லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, சிவகுரு குற்றாலம் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ.5 லட்சத்தை நேற்று முன்தினம் மாலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து, டிஎஸ்பியிடம் சிவகுரு குற்றாலம் வழங்கினார். அப்போது டிஎஸ்பி தங்கவேலுவை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. இரவு7 மணிக்கு தொடங்கிய விசாரணை,நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது. நாகர்கோவில் ராமன்புதூரில் டிஎஸ்பி தங்கியிருந்த வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிகாலை 4 மணியில்இருந்து காலை 8 மணி வரை சோதனை நடத்தினர். அந்த வீட்டில் கணக்கில் வராத மேலும் ரூ.5 லட்சம் இருந்தது. அந்த பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in