Published : 07 Apr 2022 06:30 AM
Last Updated : 07 Apr 2022 06:30 AM
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பிளஸ் 2 மாணவியை காரில் கடத்திய 4 இளைஞர்களை கிராம மக்கள் திரண்டு பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
இம்மாணவியை நேற்று நான்கு இளைஞர்கள் காரில் கடத்திச் செல்வதாக அவரது தந்தைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து அவரது தந்தை மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு, காக்கூர் கிராம காளி கோயில் அருகே காரை வழிமறித்து மாணவியை மீட்டனர்.
மேலும் கடத்திய 4 பேரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத் தனர்.
அதனையடுத்து மாணவியைக் கடத்தியதாக, கீழ்மதுரை ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்(22), முத்துராஜ் மகன் பிரபு(22), பால்ராஜ் மகன் மணிபாரதி (22), பிச்சைமுத்து மகன் அஜித்குமார் (22) ஆகிய 4 பேரையும், முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி கடத்தல் வழக்கில் கைது செய்து விசாரிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT