

புதுச்சேரியில் ரவுடிகள் வீடுகள் மற்றும் ஸ்பாக்களில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்கபோலீஸார் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும் முக்கிய ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர். குறிப்பிட்ட சில ரவுடிகளை ஊருக்குள் நுழை யவும் தடை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீனியர் போலீஸ் எஸ்.பி தீபிகா தலைமையில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் ஒதியஞ்சாலை காவல் நிலைய சரகத்துக்குப்பட்ட வாணரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் நேற்று அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மோப்பநாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்களுடன் ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளிலும் போலீஸார் இந்தச் சோதனையை நடத்தினர். சோதனையின்போது ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை. போலீஸார் சோதனை நடத்த வருவதை அறிந்து கொண்ட ஒரு சில ரவுடிகள் வீடுகளை பூட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
அதேவேளையில் 5 ரவுடிகளை பிடித்த போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
மேலும் ஒதியஞ்சாலை பகுதி களில் உள்ள 7-க்கும் மேற்பட்ட ஸ்பாக்களில் போலீஸார் சோதனைநடத்தினர்.
ஸ்பாக்களின் உரிமம் உள்ளிட் டவற்றை ஆய்வு செய்தனர். இதேபோல் உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை பகுதிகளிலும் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.