

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 14 வயது மாணவியை பலாத்காரம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (44). இவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்பள்ளியில் பயின்ற 14 வயது மாணவியை ஆசிரியர் கோவிந்தன் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கோவிந்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.