Published : 31 Mar 2022 06:45 AM
Last Updated : 31 Mar 2022 06:45 AM
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவலர் ஒருவர் மணல் கடத்தல் நபருடன் உரையாடும் சர்ச்சைக் குரிய செல்போன் உரையாடல் குறித்து கூடுதல் காவல் கண் காணிப்பாளர் சுந்தர மூர்த்தி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கட்டுப் பாட்டில் தனிப்படை இயங்கி வருகிறது. இவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில் மாவட்டம் முழுவதும் சென்று குற்றச்சம்பவங்கள், சட்ட விரோத செயல்கள் தொடர் பாக சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள் வார்கள். மாவட்டத்தின் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்பாக செயல்படும் இந்த குழுவின் மீது சமீப காலமாக தொடர் குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையில் செயல்படும் சிலர் சட்ட விரோத செயல்களில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்கு
இதற்கிடையில், வேலூரில் மணல் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவரை மணல் கடத்தலில் ஈடுபட கூறியதுடன், அவர் கடத்திச் சென்ற கடத்தல் மணல் வாகனம் பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளர் கூறியதின் பேரில் கடத்தப்பட்ட மணல் வண்டியை விடுவிக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பான செல்போன் உரையாடல் தற்போது வெளியாகி காவல் துறை அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் முதன் முதலில் நேற்று வெளி யானது. இந்த செய்தியின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேற்று விசாரணை நடத்தியுள்ளார்.
மணல் கடத்தல் நபருடன் தனிப்படை காவலர் நடத்திய ஆடியோ குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் காவல் கண் காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட் டுள்ளதாக காவல் துறை அதி காரிகள் தரப்பில் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT