Published : 30 Mar 2022 10:21 AM
Last Updated : 30 Mar 2022 10:21 AM

கடலூரில் இரவில் ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

கடலூர்: கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கடலூரில் உள்ள ஒருகடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு (மார்ச் 28) வேலை முடிந்து தனது ஆண் நண்பருடன் பைக்கில் கடலூர் கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் உள்ள ஒருஇடத்துக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் குப்பன்குளம் சிஎம்சி காலனியைச் சேர்ந்த சபரி என்ற கிஷோர்(19), புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஆரிப்(19), குப்பன்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(19) ஆகியோர்சேர்ந்து, அந்த இளம்பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் மிரட்டி, செல்போனில் வீடியோ எடுத்தனர்.

பின்னர் அந்தப் பெண்ணை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கடலூர் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்துமீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ், ஆரிப், சபரி என்கிற கிஷோர் ஆகிய 3 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக கடலூர் எஸ்பி சக்திகணேசன் நேரில் சென்று 3 பேரிடமும் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x