

சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (26). இவரும், வி.புதுக்குளத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் விக்கி, அஜித் ஆகிய 4 பேரும் சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு காரில் வி.புதுக்குளம் சென்று கொண்டிருந்தனர்.
வி.புதுக்குளம் விலக்கு அருகே பின்னால் காரில் வந்த 6 பேர் கும்பல், காரை வழிமறித்து மருதுபாண்டி, சரவணனை அரிவாளால் வெட்டியது. விக்கி, அஜித் தப்பி யோடினர். இம்மோதலில் மருதுபாண்டி உயிரிழந்தார். படுகாயமடைந்த சரவணன், மதுரை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மருதுபாண்டி மீது சிவகங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாண வரைக் கொலை செய்தது, கடந்த ஆண்டு சகோதரர்களான மருத்துவ மாணவர்கள் இருவரைக் கொலை செய்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அதேபோல், சரவணன் (27) மீதும் கொலை வழக்கு உள்ளது.