Published : 26 Mar 2022 07:32 AM
Last Updated : 26 Mar 2022 07:32 AM
சிவகங்கை: மானாமதுரையில் இரிடியத்துக் காக ரூ.3.5 கோடியை இழந்த தொழிலதிபர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து உறவினர்கள் மறியல் செய்தனர்.
மானாமதுரை ஆனந்தபுரம் பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் குட்டி (எ) ராஜீவ்காந்தி(39). தொழிலதிபர்.
இவரிடம் தேனி மாவட்டம், போடி வட்டம் பொட்டல்களம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கவுர் மோகன்தாஸ்(38) இரிடியம், கோபுரக்கலசம் தருவதாகக் கூறி யுள்ளார். இதை நம்பி, அவரிடம் 2015-ம் ஆண்டு ரூ.3.5 கோடியை ராஜீவ்காந்தி கொடுத்துள்ளார்.
ஆனால் சொன்னபடி இரிடியம், கோபுரக்கலசத்தை கவுர் மோகன் தாஸ் கொடுக்கவில்லை. பணத்தை யும் தர மறுத்துவிட்டார்.
இதனால் ராஜீவ்காந்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கவுர் மோகன்தாஸை கடந்த ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தி வந்து தனது வீட்டில் அடைத்து வைத்தார். அவரை போடி போலீஸார் மீட்டுச் சென்றனர்.
அதன் பிறகு, ராஜீவ்காந்தி ரூ.3.5 கோடியை மீட்டுத் தருமாறு சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் மனு கொடுத்தார்.
பணத்தை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த ராஜீவ்காந்தி மார்ச் 22-ம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இதையடுத்து போலீஸார் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி ராஜீவ் காந்தியின் உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே நேற்று காலை மறியல் செய்தனர். போலீஸார் சமரசத்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT