Published : 26 Mar 2022 06:12 AM
Last Updated : 26 Mar 2022 06:12 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் காதல் ஜோடியிடம் நகையை பறித்து விட்டு இளம்பெண்ணி டம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 2 பேரை பிடிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர், தலைமைக் காவ லருக்கு வாள் வெட்டு விழுந்தது.
காயமடைந்த போலீஸார். மூக்கையூர் துறைமுகக் கடற் கரைப் பகுதியில், கடந்த 23-ம்தேதி அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி(21), அவரது காதலர் ஹரிகிருஷ்ணனுடன் சுற்றுலா சென்றார். அப்போது கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த மூன்று பேர் காதல் ஜோடியை மிரட்டி நகை, மொபைல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
தினேஷ்குமார் இந்நிலையில், அந்த இளைஞர் களின் செயலால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை செய்தபோது, தன் கண் முன்னே காதலியிடம் 3 இளைஞர்கள் பாலி யல் அத்துமீறலில் ஈடுபட்டதால் தற்கொலைக்கு முயன்றதாக ஹரிகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் பதுங்கியிருந்த, அதே ஊரைச் சேர்ந்த முத்தரியப்பன் மகன் பத்மேஸ்வரன்(24), விருதுநகர் மாவட்டம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (20) ஆகிய இருவரையும் நேற்று மாலை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
அப்போது சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தலைமைக் காவலர் கருப்பசாமி ஆகியோரை இருவரும் வாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றனர்.
அப்போது போலீஸாருக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்ட கடும் மோதலில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டதால் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக போலீஸார் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன், மாவட்ட எஸ்பி இ.கார்த்திக் உள்ளிட்டோர் விசா ரணை நடத்தினர்.
பத்மேஸ்வரன், தினேஷ்குமார் ஆகியோர் மீது ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பல் வேறு குற்ற வழக்குகள் உள்ள தாக போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT