இயக்குநர் டி.ராஜேந்தர் சென்ற கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

இயக்குநர் டி.ராஜேந்தர் சென்ற கார் மோதிய விபத்தில் முதியவர் பலி
Updated on
1 min read

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, இளங்கோ தெருவில் கடந்த 18-ம் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த முதியவர் தியாகராய நகரைச் சேர்ந்த முனுசாமி (70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீஸார் நடத்திய, விசாரணையில் அந்த கார் நடிகர் சிம்புவின் (சிலம்பரசன்) பெயரில் உள்ள கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தற்போது காரை ஓட்டிச் சென்ற தாமஸ் ரோடு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வம் (29) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in