விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளிடம் மர்ம நபர்கள் பாலியல் சீண்டல்: ஒருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்த நோயாளிகள்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளிடம் மர்ம நபர்கள் பாலியல் சீண்டல்: ஒருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்த நோயாளிகள்

Published on

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மயக்க நிலையில் உள்ள பெண்களிடம் பாலியல் சீண்டல் மற்றும் திருட்டு சம்பவங்கள் நடப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில், விருத்தாசலம் அதன்சுற்று வட்டார பகுதியில் உள்ளகருவேப்பிலங்குறிச்சி, கண்டப்பங் குறிச்சி, பூவனூர், பரவளூர், விஜய மாநகரம், சித்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைப்பெற வருகின்றனர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படு கின்றனர். இதில், அறுவை சிகிச் சைக்குட்படுத்தப்பட்டு மயக்க நிலையில் இருக்கும் பெண் நோயாளிகளை குறிவைத்து மர்ம நபர் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் செல்போன்களையும் மர்மநபர்கள் பறித்துச் செல்வதாக கலியமூர்த்தி என்ற நோயாளி வேதனையோடு தெரிவித்தார்.

இதனிடையே இருதினங்க ளுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் வார்டு உள்ளே நுழைந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவரை அங்கிருந்த நோயாளிகள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேபோல் ஒரு பெண் நோயாளிடம் நேற்று ஒருவர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். அங்கிருந்த மற்றநோயாளிகள் அவரை விரட்டி பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத் தனர். போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் சாத்து குடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எழிலிடம் கேட்டபோது, "நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். பெண் நோயாளிடம் நேற்று ஒருவர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in