

திருவண்ணாமலை அருகே பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப் பாக பணத்தை திருப்பி தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி செய்து விட்டதாக மளிகை கடைக்காரர் குடும்பத்தினர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கிராம மக்கள் நேற்று புகார் அளித்துள்ளனர்.
தி.மலை மாவட்டம் கீழ்பென் னாத்தூர் வட்டம் ஜமீன் கூடலூர் கிராமத்தில் வசிக்கும் தேவராஜ் உள்ளிட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் அளித்துள்ள மனுவில், “எங்கள் கிராமத்தில் மளிகை கடை மற்றும் நகை அடகுக் கடை நடத்தி வருபவர் சங்கர். இவர், பங்கு சந்தையிலும் பங்குதாரராக உள்ளார் என கிராம மக்களிடம் கூறி வந்துள்ளார். மேலும் அவர், பங்கு சந்தையில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், இரட்டிப்பாக திருப்பி தருவதாகவும் மற்றும் ஒரு ரூபாய் வட்டி கொடுப்ப தாகவும் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நம்பி, அவர் தெரிவித்த நபர்களின் பெயர்களில் உள்ள வங்கி கணக்கு மற்றும் ரொக்கமாக என அவரது குடும்பத்தினரிடம் 20 பேர், ரூ.1,35,10,000 கொடுத்துள்ளனர். இந்நிலையில் கொடுத்த பணத்தை திருப்பித் தரவும் இல்லை, வட்டியும் கொடுக்கவில்லை.
இதையடுத்து சங்கர் வீட்டுக்கு கடந்த 13-ம் தேதி சென்று கேட்டால், பெங்களூருவில் இருந்து ரவுடிகளை வரவழைத்து கொலை செய்து விடு வோம் என கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்களை மோசடி செய்துள்ள சங்கர் மற்றும் அவரது குடும்பத் தினர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித் துள்ளனர்.