கேத்தனூர்: மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளரிடம் இருந்து 144 சவரன் பறிமுதல்

கேத்தனூர்: மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளரிடம் இருந்து 144 சவரன் பறிமுதல்
Updated on
1 min read

கேத்தனூர் வங்கிக்கிளையில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் கண்ணிகளை நூதனமாக திருடியதாக கைது செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளரிடமிருந்து 144சவரன் நகை மற்றும் ரூ.19 லட்சத்து80 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், கடந்த மே மாதம் விவசாயி கோவிந்தராஜ் (52) என்பவர் தங்கநகையை அடமானம் வைத்துள்ளார். குறிப்பிட்ட தொகையை செலுத்தி கடந்த 10-ம் தேதி நகையை திருப்பியபோது, அதன் எடை குறைந்திருப்பது,

தெரியவந்தது. இதுதொடர்பாக கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரித்தனர். அதில், கேத்தனூர் வங்கிக்கிளையில் அடமானம் வைத்த நகைகளில், கண்ணிகளை (இணைப்புகள்) மட்டும் நகை மதிப்பீட்டாளர் சேகர் நூதனமாக திருடியது, தெரியவந்தது.

சேகர் மீது காமநாயக்கன் காவல் நிலையத்தில், எஸ்பிஐ கேத்தனூர் வங்கிக் கிளை மேலாளர் சுதாதேவி புகார் அளித்தார். இதையடுத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகர் (57) மீது பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் வங்கியில் குற்றம் இழைத்தல், மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 144 சவரன் தங்க நகைகள், ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in