

திருப்பரங்குன்றம் அருகிலுள்ள ஹார்விபட்டி பகுதியில் வீடு ஒன்றில் பெண்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உதவி காவல் ஆணையர் அக்பர்கான் தலைமையில் திருப்பரங்குன்றம் மகளிர் காவல் ஆய்வாளர் ஹேம மாலா, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பிளவர் ஷீலா ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
அப்போது, பெண்களை வைத்து பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதாக கிருஷ்ணமூர்த்தி, அசோக்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கிருந்த 5 பெண்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டனர்.
விசாரணையில், அச்சிறுமியின் தாயே அவரை அச்செயலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாயாரும் கைது செய் யப்பட்டார். சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் உட்பட 11 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.