வேடசந்தூர் அருகே தங்கை கொலை: அக்கா கைது

வேடசந்தூர் அருகே தங்கை கொலை: அக்கா கைது
Updated on
1 min read

வேடசந்தூர் அருகே நாக கோனானூரை சேர்ந்தவர் தமிழ் செல்வி(43). இவரது கணவர் இறந்து விட்டார். தனது அக்கா வெங்கடேஸ்வரியுடன் தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலையில் எழுந்த வெங்கடேஸ்வரி, தனது மகனுடன் பேச வேண்டும், மொபைல் போனை தருமாறு தங்கை தமிழ் செல்வியிடம் கேட்டார். தூக்கத்தில் இருந்த அவர் இந்த நேரத்தில் பேச வேண்டாம் எனக் கூறி தூங்கிவிட்டார். ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரி வீட்டில் இருந்த அரிவாள் மனையால் தமிழ்ச் செல்வியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். வெங்கடேஸ் வரியை(46) வேடசந்தூர் போலீ ஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in