அரியலூர்: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தங்கும் விடுதி உரிமையாளர் கைது

அரியலூர்: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தங்கும் விடுதி உரிமையாளர் கைது

Published on

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த தங்கும் விடுதி உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா (28), கீழப்பழுவூர் சந்திரா(30), ராஜேந்திரன்(62), தஞ்சை வினோத்(29), வி.கைகாட்டி பிரேம்(29), பாலச்சந்திரன்(27), செந்துறை தனவேல் (45), வெற்றிச்செல்வன்(37), திருமானூர் தெய்வீகன் (44) ,அமிர்தராயன் கோட்டையைச் சேர்ந்த நாகராஜ் மனைவி இந்திரா(40) ஆகியோரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரியலூர்- செந்துறை சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளரான செந்துறை சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி(45) என்பவரை நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in