சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மலை மாணவர் விடுதி பொறுப்பாளர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மலை மாணவர் விடுதி பொறுப்பாளர் கைது
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிக்கான விடுதியில் வெளியூர்களை சேர்ந்த 113 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

விடுதி துணை காப்பாளராக தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரம் பகுதியில் வசிக்கும் துரைபாண்டியன்(35) பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர், விடுதியில் தங்கி உள்ள சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 8-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் தொடர்ந்ததால், சைல்டு லைன் 1098 என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

துரைபாண்டியன்
துரைபாண்டியன்

இதையடுத்து அவர்களது தகவலின் பேரில், சேத்துப்பட்டு காவல்துறையினர், விடுதிக்கு நேற்று முன் தினம் இரவு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, மாணவர்களை மிரட்டி துரைபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து துரைபாண்டியனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in