

ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அடிக்கடிஅலை பேசியில் பேசி வந்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்துசிறுமியின் தாயார், சகோதரி ஆகியோர் கேட்டுள்ளனர். அப்போது காங்கயம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (33) என்பவர், தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வருகிறார்எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.