ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல்: திண்டுக்கல்லில் 4 பேர் கைது

திண்டுக்கல்லில் பிடிபட்ட குட்கா உள்ளிட்டபுகையிலைப் பொருட்கள்.
திண்டுக்கல்லில் பிடிபட்ட குட்கா உள்ளிட்டபுகையிலைப் பொருட்கள்.
Updated on
1 min read

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் நகருக்குள் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ., மாரிமுத்து, சேக்தாவூத் மற்றும் போலீஸார் திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குடோனில் பதுக்கி வைப்பதற்காக சரக்கு வாகனத்தில் குட்காவைஏற்றிவந்த பெரியமல்லனம்பட்டியை சேர்ந்த காளிராஜா (29), கவாஸ்கர் (25), பெங்களூருவை சேர்ந்த நாராயணன் (41), அரக்கோணத்தை சேர்ந்த புருஷோத்தமன் (34) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடமிருந்து அரசால் தடைசெய்யப்பட்ட ஆயிரம் கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்கா கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in