

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47.26 லட்சம் மோசடி செய்த 2 பேரை மதுரை தல்லாகுளம் போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை விசுவநாதபுரம் சென்ட்ரல் வங்கி காலனியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(60). இவரது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக மதுரையைச் சேர்ந்த புகழ் இந்திரா, ரேணுகா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதை நம்பி கடந்த ஆண்டு ரூ.47.26 லட்சத்தை பஞ்சவர்ணம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது குறித்து பஞ்சவர்ணம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புகழ் இந்திரா, ரேணுகா ஆகியோர் மீது தல்லாகுளம் போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.