

திருப்பூர் அருகே 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி, கடந்த 4-ம் தேதி மாயமானார். புகாரின்பேரில், மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சிறுமி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிறுமியை போலீஸார் மீட்டு, அவரை கடத்தி பாலியல் தொல்லை அளித்த இச்சிபட்டியை சேர்ந்த வாகன ஓட்டுநர் பொன்னுசாமி (27) மற்றும் உடந்தையாக இருந்த கொடைக்கானல் பள்ளிபாளையத்தை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா (22) ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.