

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் சாராய விற்பனை அதிகரித்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய காவல் துறை அதிகாரிகளிடம் சாராய வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ராணி, ஜோதி உட்பட 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கணவர் சீனு ஆகிய 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.