

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சசிதரன் (45). இவரது மூத்த மகள் சினேகா என்பவர் அருகில் உள்ள கீராம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (25) என்வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சசிதரன் மற்றும் விக்னேஷ் குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், விக்னேஷ்வரன் அவரது தந்தைமணி (45) மற்றும் சகோதரர் பசுபதி (27) ஆகியோர் சசிதரனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த தகவலறிந்த ஆற்காடு கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.