அரியலூர்: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது

அரியலூர்: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது
Updated on
1 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாந்தா(28) என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன் 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு சேர்த்துவிடுவதாக அவரது பெற்றோரிடம் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை கீழப்பழூவூரை சேர்ந்த சந்திரா(30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

அவர், சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனிடையே சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் நேற்று முன்தினம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். பின்னர், சிறுமியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தஞ்சையை சேர்ந்த வினோத்(29), வி.கைகாட்டியை சேர்ந்த பிரேம்(29), பாலச்சந்திரன்(27), செந்துறையை சேர்ந்த தனவேல்(45) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in