கோவை: கடன் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.5.19 லட்சம் மோசடி

கோவை: கடன் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.5.19 லட்சம் மோசடி
Updated on
1 min read

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி திவ்யா (36). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், ‘சில மாதங்களுக்கு முன்னர் எனது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், பெங்களூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், லட்சக்கணக்கில் கடன் தருவதாகவும் கூறினர். கடன் தொகைபெற ரூ.5.19 லட்சம் முன்தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறினர். அதன்படி, பல்வேறு தவணைகளில் ஆன்லைன் மூலமாக ரூ.5.19 லட்சம் செலுத்தினேன். ஆனால், கூறியபடி கடன் தொகையை தரவில்லை. அந்நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிந்து சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in