

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சசாங் சாய் கூறும்போது, "உடுமலையை அடுத்த கணியூர் அக்ரஹாரம் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (எ) பாலாஜி (50). வெங்கிட்டாபுரம் காளியம்மன் கோயில் பூசாரியான இவர், தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்திருப்பதாக, பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (என்சிஎம்இசி சைபர் டைப்லைன்) என்ற அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். அதன்படி, போக்ஸோ சட்டத்தின் கீழ் உடுமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்துள்ளனர்" என்றனர்.