நயினார்கோவில் அருகே பெண் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

நயினார்கோவில் அருகே பெண் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

Published on

நயினார்கோவில் அருகே வயல் வெளிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயி னார்கோவில் அருகேயுள்ள சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் மனைவி ராணி (52). இவர்களது மகள் சுமத்ரா, மகன் மதன்ராஜ் ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.

நேற்று காலை வயலுக்குச் சென்ற ராணி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாலையில் அவரை தேடி உறவினர்கள் வயலுக்குச் சென்றனர். அப் போது வயல்வெளியில் ராணி இறந்து கிடந்தார். அவர் அணிந் திருந்த 3 பவுன் நகைகள் திருடு போயிருந்தது.

நயினார்கோவில் போலீஸார், ராணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி ராணியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர் களிடம் கூடுதல் காவல் கண் காணிப்பாளர் லயோலா இக் னேஸியஸ், டிஎஸ்பி ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத் தினர். இதையடுத்து உறவினர்கள் மறி யலை கைவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in