போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1.61 லட்சத்தை இழந்த காரைக்குடி பெண்

போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1.61 லட்சத்தை இழந்த காரைக்குடி பெண்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பெண் ஒருவர் போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1.61 லட்சத்தை இழந்தது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி ரேவதி (38). ஆன்லைன் வர்த்தக நிறுவனம் என்ற பெயரில் பணத்தை இரட்டிப்பு ஆக்குவதாக விளம்பரத்தை பார்த்துள்ளார்.

இதையடுத்து அந்த ஆன்லைன் நிறுவனத்தில் கணக்கு தொடங்கி, சிறிய அளவில் பணம் முதலீடு செய்துள்ளார். அதற்கு அவருக்கு ஊக்கத் தொகை கிடைத்துள்ளது.

ஆனால், அந்த தொகை ஆன் லைன் நிறுவனம் கொடுத்த அக் கவுண்டிலேயே இருந்தது.

இந்த தொகையை பார்த்ததும் தொடர்ந்து பணம் முதலீடு செய் துள்ளார். ஆனால், அவருக்கு அதற்கேற்ப பணம் கிடைத்தாலும், அது அக்கவுண்டிலேயே இருந் துள்ளது. இறுதியாக ரூ.1.61 லட்சம் இருந்துள்ளது. அந்த பணத்தை அக்கவுண்டில் இருந்து எடுக்க முற்பட்டபோது, எடுக்க முடியவில்லை.

அதன்பிறகுதான், அது போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in